பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு!!!

Institute of Junior  கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த (6) யாழ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

விசேட விருந்தினராக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண அலுவலக பிரதிப் பணிப்பாளர் திருமதி.கே.ஜீவகன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் செல்வி பபிதா யோகநாதன் அவர்கள் மற்றும் மனித உரிமைகள் அலுவலர் திரு. பி. சிறிபவன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் கல்வி நிறுவனத்தின் சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பரீட்சைகளில் உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந் நிகழ்வில்  Institute of Junior  கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், நிர்வாகிகள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.