மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்வு – கல்வி அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு (photo)
அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்கக் கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். எல். பீரிஸ் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான வளங்கள் மற்றும் திறன்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதிகளுடன் முன்னெடுத்த பல சுற்றுக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை