பெரும் போக முன்னோடிப்பயிற்சி – மல்வத்தை விவசாய விரிவாக்கள் நிலையத்தில்!

 -ஐ.எல்.எம் நாஸிம்-  

பெரும் போக நெற்செய்கையின் விளைச்சலை அதிகரிக்கும் வழிகள் தொடர்பான கருத்தரங்கு இன்று (10) மல்வத்தை விவசாய விரிவாக்கல்  நிலையத்தில் மல்வத்தை விவசாய போதன ஆசிரியரும் மல்வத்தை விரிவாக்கள்  நிலையத்தின்  பொறுப்பதிகாரியுமான  எம்.டி.எ கரீம் தலைமையில்  இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில்  களப்பு வெள்ளாண்மையை எவ்வாறு கட்டுப்படுத்துவது பெரும்போக பயிர்செய்கையின் விளைச்சலை அதிகரிக்கும் முறைகள்,பயிர் செய்கையின் போது பணத்தை மீதப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கும் வழிமுறைகள் போன்ற பல விடயங்களை  விரிவுரையாளர்களான விவசாய போதன ஆசிரியர் எம்.டி.எ நளீர்,தொழினுட்ப உத்தியோகத்தகர் ஏ.ஜி.எம் றிபாயிஸ் விவசாயிகளுக்கு வழங்கி இருந்தனர்.
கருத்தரங்கு 2020-08-20 – 2020-09-12 வரை இடம் பெறும்.சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்திற்குட்பட்ட 30கண்டங்களில் விவசாயிகளுக்காக கட்டம் கட்டமாக கருத்தரங்கு இடம்பெறுவதுடன் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு திணைக்களத்தின் அதிகாரிகள் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளனர்.
இன்று(10) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விவசாயிகளால் பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட
யானை தாக்கத்தினால் வயல் நிலங்களுக்கு செல்ல முடியாமல் காணப்படுவதாலும் யானைகள் வயல் நிலங்களை சேதப்படுத்துவாதால் மிகவும் மன வேதனைகளுக்கு உள்வாங்கப்படுவாதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
யானைகளை கட்டுப்படுத்துவதற்கான பல வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றன.இன்னும் சில நாட்களுக்குள் மின்வேலிகள் அமைத்து தருவதாக  மல்வத்தை விவசாய விரிவாக்கள்  நிலையத்தின் பொறுப்பதிகாரி  எம்.டி.எ கரீம் கூறினார்.
சம்மாந்துறை பொலிஸ் எல்லைகுட்பட்ட மல்வத்தை கணபதிபுரம் பகுதியில் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம் (வயது 59) என்ற விவசாயியே நேற்று (09) கீரை பிடுங்கி கொண்டு இருக்கும் போது   காட்டு யானை தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.