விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது.
உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது.
மானிலமஙெ்கும் உளநலம் மற்றும் சில பழக்கங்களுக்கு அடிமையானோர் தொடர்பான சேவைக்களுக்கென ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 14.75 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இது குறித்த விபரங்களை முதல்வர் டக் போர்ட்டும், உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான இணை அமைச்சர் மைக்கல் திபோலோவும் வழங்கினர்.
இந்நிதி பின்வருமாறு வழங்கப்படவுள்ளது:
- உளநல மற்றும் பழக்கசூழ்நிலைக்கு அடிமையாகியுள்ளோருக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், கொவிட்-19 நோய்த்தொற்றால் உருவாகியுள்ள தற்போதைய வாழ்க்கைமுறை, குடியிருப்பு ஆதரவு வசதிகள் உட்பட, இவற்றில் உள்ள தற்போதைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் 7 மில்லியன் டொலர்கள்,
- பழங்குடிமக்களுக்கான கலாசார பாதுகாப்பு, அவர்களின் குழந்தைகள் மற்றும் இளைஞர் தொடர்பான சேவைகளுக்கு 4.75 மில்லியன் டொர்கள்,
- இணையத்தள சேவை உட்பட, பழக்க சூழலுக்கு அடிமையானோருக்கான ஆதரவு சேவைக்கான விரிவாக்கம், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் இணையத்தள சமுக உளநல ஆதரவு சேவை போன்றவற்றுக்கு 3 மில்லியன் டொர்கள்.
- கொவிட்-19 ஐ கட்டுப்படுத்தும் நோக்கோடு ஒன்ராறியோ அரசாங்கம் எட்டு ஆராய்ச்சி திட்டங்களில் கூடுதலாக 2.9 மில்லியனை முதலீடு செய்கிறது.
- குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் உளநலம், அவற்றுக்கான மதிப்பீடு, கொவிட்-19ஆல் ஏற்படும் நீண்டகால தாக்கம், நோயாளிகளின் பராமரிப்பைக் கண்காணிப்பதற்கான செயலி, நோய்த் தொற்றினைத் தடுக்க முகமூடிகளை அணிவது தொடர்பான மதிப்பீடு போன்றவற்றில் இந்த திட்டங்கள் கவனம் செலுத்தும்.
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ, றூஜ்பார்க்.
கருத்துக்களேதுமில்லை