விவசாயி மகன் ஜப்பான் பிரதமரானார்!!!!
ஜப்பானின் புதிய பிரதமராகயோஷிஹிடே சூகா தெரிவாகியுள்ளார்.
சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார்.
இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹிடே சூகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார்.
77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் அபேயின் நெருக்கமானவருமாவார்.
ஜப்பானின் அக்கிடா மாநிலத்தைச் சேர்ந்த இவர், விவசாயின் மகனாவார்.
பாடசாலை கல்வியை முடித்தவுடனேயே தொழில்வாய்ப்பைத் தேடி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டுவந்தவர்.
பல்வேறு கடைகளில் தொழில்செய்துவந்த காலத்திலேயே தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினையும் முடித்தார்.
அதன் பின் அரசியல் பிரிவை தெரிவுசெய்துகொண்ட அவர், யொகோஹாமாவில் நடந்த நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.
தினமும் 300 வீடுகள் என 30000 வீடுகளுக்கு கால்நடையாகவே சென்று பிரசாரம் செய்தார்.
இதற்காக 06 ஜோடி சப்பாத்துக்கள் வீணாய்ப் போனதாக அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் குறிப்பிட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை