இன்றைய ராசிபலன்(17/09/2020)
-
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள் .
-
கடகம்
கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
-
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும்.. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
-
துலாம்
துலாம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்,நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
தனுசு
தனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னைகளை தீர்க்க எளிய வழியை கண்டறிவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
-
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.
-
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லவை நடக்கும் நாள்.
-
மீனம்
மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர்உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மெச்சும் படி நடந்து கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
கருத்துக்களேதுமில்லை