கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு துரோகம் இழைத்த வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கம்!!
வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில் North premier League (NPL) எனப் பெயரிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தப்பட்டு வருகிறது.
குறித்த சுற்றுத்தொடரின் முக்கிய போட்டி ஒன்று இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட அணிக்கும் இடையிலான போட்டி நேற்று வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று 2.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு அணி 143 ஓட்டங்களை பெற்றது. 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி கிளிநொச்சி மாவட்ட அணி துடுப்பெடுத்தாடிய போது ஒரு ஆறு ஓட்டம் ஒன்றினை பெற்ற போது ஓர் சர்ச்சை எழுந்தது. குறித்த ஆறு ஓட்டத்தை பெற்றுக் கொண்ட பந்தினை வீசுகின்ற போது களத்தடுப்பாளர் வெளியே இருந்து வந்திருக்கின்றார்.
குறித்த சம்பவத்தின்போது சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கு ஏற்ப முறையற்ற பந்தாகவே கணிக்கப்படுவது வழமை ஆனால் இந்தப் போட்டியின் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் குறித்த பந்தினை இறந்த பந்தாக கணிக்கப்பட்டது.
இது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு தவறானது. ஆனாலும் அதே முறையில் நடுவர்கள் விடாப்பிடியாக இருந்தார்கள். அவர்களுடன் வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கமும் ஏற்பாட்டாளர்களும் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டனர்.
குறித்த சர்ச்சை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தாமதப்படுத்தப்பட்டது. போட்டியின் நிலையைக்கூட வீரர்களுக்கு விளக்க முடியாத நிலையில் போட்டியின் நடுவர்கள் இருந்தனர். காரணம் போட்டியின் நடுவர்களாக இருந்தவர்கள் இருவரும் சிங்கள மொழியைப் பேசுகின்றவர்களே இருந்தனர். அதுவும் குறித்த போட்டியின் குறைபாடகவே இருந்தது.
குறித்த போட்டியின் ஏற்பாட்டாளர்கள் இனந்தெரியாத மது போதையில் இருந்தவர்களைக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றினர். பின்னர் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட அணியினரின் கண்ணியமான செயற்பாட்டின் காரணமாக குறித்த போட்டி பின்னர் சுமுகமாக நடைபெற்றது.
குறித்த முறைகேட்டை பதிவு செய்த ஊடகவியலாளரையும் நடாத்தியவர்களும் அவர்களால் ஏவப்பட்ட இனந்தெரியாத நபர்களும் அச்சுறுத்தினர்.
கருத்துக்களேதுமில்லை