கொரோனா நோயாளர்கள் 3345ஆக அதிகரிப்பு!..

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 345ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வருகைத்தந்த இருவர், கட்டாரிலிருந்து வருகைத்தந்த 6 பேர், உக்ரைனிலிருந்து வருகைத்தந்த மூவருக்கும் மற்றும் அல்பைனிலிருந்து வருகைத்தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 158 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 174 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ்தொற்றைக் கண்டறிவதற்காக 2 இலட்சத்து 78 ஆயிரத்து 145 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.