ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி!!!

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள்.

தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

ஷிவானி நாராயணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக லாக்டவுனில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும் போது மிகவும் குண்டாக இருப்பதாகவும் ட்ரோல் செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.