மரித்த விசுவாசிகளின் தின வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலை துப்பரவு…

எதிர்வரும் 02ம் திகதி இடம்பெறவுள்ள மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையை துப்பரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் மாநகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் மேற்படி சிரமதான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

மிகவும் பற்றைக்காடுகள் நிறைந்த நிலையில் காணப்பட்ட இச் சேமக்காலையினை மேற்படி வழிபாட்டு நிகழ்விற்காக துப்பரவு செய்து தருமாறு பிரதேச அமைப்புகள் மற்றும் பொது மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக மாநகரசபை உறுப்பினரால் மாநகரசபை முதல்வர் மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மேற்படி துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நவம்பர் 02ம் திகதி மரித்த விசுவாசிகளினுடைய தினமானது கத்தோலிக்க திருச்சபையினால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தற்போதையை கொரோணா நிலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக இருக்கின்ற போதிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவரவர் குடும்ப உறவுகளையாவது நினைவுகூர அநுகூலமாக இருக்கும் என்ற வகையில் மேற்படி சிரமதான செயற்பாடுகள் மாநகரசபை உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.