T-20 ;1000 சிக்ஸர்கள் – கிறிஸ் கெயில் சாதனை

TT-20 போட்டிகளில் ஆயிரம் சிக்ஸர்களை விளாசிய முதலாவது வீரர் என்ற பெருமை கிறிஸ் கெயிலுக்கு கிடைத்துள்ளது.

 அபுதாபியில் இடம்பெற்ற 50ஆவது ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக எட்டு சிக்ஸர்கள் அடங்கலாக 99 ஓட்டங்களை குவித்த வேளையில், கிறிஸ் கெயில் இந்த மையில் கல்லை கடந்தார்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் வீரர்கள் நான்கு விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றார்கள். ராஜஸ்தான் வீரர்கள் 18 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.