கொரோனாவை பயன்படுத்தி தமிழர்களை அச்சுறுத்தும் படை-சபையில் குற்றச்சாட்டு
கொரோனா சட்டங்களை பாதுகாப்பு பிரிவு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கே பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ் மக்கள் தேசிய காங்கிரஸின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து உரையாற்றினார்.
‘யாழில் உள்ள தமது கட்சியில் திடீரென பிரவேசித்த பாதுகாப்பு பிரிவினர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமரர் சு.பா. தமிழ்ச் செல்வனின் நினைவேந்தலை செய்தால் கைது செய்வதாக அச்சுறுத்திவிட்டுச் சென்றனர். கொரோனா வைரஸ் தலைவிரித்தாடிவரும் நிலையிலும் இப்படிப்பட்ட பாதுகாப்புத்துறையின் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. கடந்த காலத்தில் கிளிநொச்சியிலுள்ள தமிழ் மருத்துவர் ஒருவர்கூட பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை