அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்-இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப்கூறியுள்ளார்.
லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பார்த்ததை விட போட்டி கடுமையாக உள்ளது என்றார்.
அதிபர் பதவியில் அமர்வது யார் என்பது இழுபறி உள்ள நிலையில், முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை காத்திருப்பதே சிறந்தது என்று அவர் கூறினார்.
அமெரிக்க தேர்தல் முறை மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், முழுமையான முடிவுகள் வரும் காத்திருக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிபராக யார் பதவி ஏற்றாலும் அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக டொமினிக் ராப் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை