இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்-மு.க. ஸ்டாலின்

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், ஆன்- லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு  உத்தரவிட்டு 3 மாதம் ஆகியும் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.

சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிடவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆன்- லைன் சூதாட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.