மலேசிய- தாய்லாந்து எல்லையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது …
மலேசியாவின் Tumpat பகுதியில் உள்ள மலேசிய- தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்த எல்லைப் பகுதியில் உள்ள சட்டவிரோத பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற போது கைதாகியுள்ளனர்.
“இந்த கைதுகள் மூலம், சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவுக்குள் அழைத்து வருவதில் உள்ளூர் கடத்தல்காரர்களின் பங்கு இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை,” எனக் கூறியிருக்கிறார் Tumpat மாவட்ட காவல்துறையின் தலைமை அதிகாரி ரஷித் மேட் தவுத்.
‘Op Bersepadu Covid-19’ எனும் நடவடிக்கையின் கீழ் Tumpat சுற்றுவட்டார பகுதிகளில் இத்தேடுதல் வேட்டை நடந்திருக்கிறது.
கருத்துக்களேதுமில்லை