நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள்!
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.
இன்றிலிருந்து கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டில் தற்போது உள்ள கொரோனா அச்சநிலைமையின் காரணமாக ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பவரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்குள் பக்தர்கள் எவரும் செல்லஅனுமதிக்கப்படவில்லை .
எனினும் வழமைபோன்று கந்தசஷ்டி விசேட பூசை வழிபாடுகள் ஆலயத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட பூசகர்களுடன் இடம்பெற்று வரும் நிலையில் பக்தர்கள் எவரும் நல்லூர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் பக்தர்கள் ஆலய வெளி வீதியில் நின்று கந்தனை தரிசிக்கின்றனர்
கருத்துக்களேதுமில்லை