உதயநிதி ஸ்டாலின் கைது வைகோ கண்டனம்…
திருக்குவளையில் பொதுமக்களைச் சந்திக்க முயன்ற, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்தது, கடும் கண்டனத்திற்கு உரியது.
கருத்து உரிமையை, பேச்சு உரிமையை யாராலும் தடுக்க முடியாது. மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களாலும் முடியவில்லை. நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்ற அச்சத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு, இத்தகைய அடக்குமுறையில் ஈடுபட்டு உள்ளது.
ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது, எதிர்க்கட்சிகளின் கடமை. அதற்காக, பொதுமக்களைச் சந்திக்கும்போது பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர, சந்திக்க விடாமல் தடுக்க, எந்த அதிகாரமும் இல்லை. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது; அண்ணா தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவும் முடியாது.
கருத்துக்களேதுமில்லை