சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கான விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக மேடை நாடகத் துறையினருக்கு காப்புறுதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை 2020ஆம் ஆண்டிலேயே யதார்த்தமாக்கும் வகையில் அறிமுகப்படுத்தும் இந்த காப்புறுதி திட்டம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் தலைவருமான பிரதமரின் மேற்பார்வை மற்றும் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்படும்.
தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையினால் செயற்படுத்தப்படும் இந்த ‘பிரேக்ஷா ரக்ஷன’ திட்டத்தினூடாக திறமை மிக்க மேடை நாடகத் துறையில் நாடக திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு, வசனம், பின்னணி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, மேடை அமைப்பு, இசையமைப்பு, மேடை நிர்வகிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஈடுபடும் 35 வயதிற்கும் 75 வயதிற்கும் இடையிலான நாடகக் கலைஞர்களுக்கு காப்புறுதி வழங்கப்படும்.
இந்த காப்புறுதி திட்டத்தற்கென காப்புறுதி பயனாளர்களிடமிருந்து எவ்வித தொகையும் அறிவிடப்படாமை சிறப்பம்சமாகும். இக்காப்புறுதி திட்டத்தில் நாடக துறையில் தங்களது திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
தேசிய மட்டத்தில் விருது பெற்றவர்கள் மற்றும் விண்ணப்பிக்கும் திகதிக்கு 05 வருடங்கள் தொடர்ந்து நாடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், விண்ணப்ப திகதிக்கு 10 வருடங்களுக்கு குறையாது நாடகத்துறையில் ஈடுபட்டவர்களும் இந்த காப்புறுதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
‘பிரேக்ஷா ரக்ஷன’ காப்புறுதிக்கான விண்ணப்பங்களை www.towerhall.lk
கருத்துக்களேதுமில்லை