எலுமிச்சை கலந்த நீர் குடிச்சா உங்க உடம்பில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?
தினமும் தான் தண்ணி குடிக்கிறோம். ஆனா எலுமிச்சை சேர்த்து குடிச்சா உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் அற்புதமானவை. அதை தான்
எலுமிச்சை ஆரோக்கியமானது. எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடித்தால் அது ஆரோக்கியத்தை உண்டாக்குமா? என்ன மாதிரியான நன்மைகளை உடலுக்கு அளிக்கும் என்பது குறித்து சிறிய ஆய்வுகளும் உண்டு. தினமும் காலையில் டீ, காஃபிக்கு பதிலாக எலுமிச்சை நீரோடுதான் பலரும் தங்களது நாளை தொடங்குகிறார்கள்.
எலுமிச்சை நீர் மிக முக்கியமாக சருமத்தில் அதிக தாக்கத்தை உண்டாக்கும். அதாவது அதீத நன்மை செய்யும். எலுமிச்சை வைட்டமி சி, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலேட், கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த சிறந்த மூலம். இது நார்ச்சத்து மற்றும் பைடோ நியூட்ரியண்ட்ஸ் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் துணைபுரிகிறது.
இது உடலில் இருக்கும் நச்சுக்களையும் அகற்ற உதவுகிறது.குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. எலுமிச்சை நீர் உடலுக்குள் என்ன விதமான மாற்றங்களை உண்டாக்குகிறது என்று பார்க்கலாம்?
உடலில் நீரேற்றத்தை தக்கவைக்கிறது
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று பல கட்டுரைகளிலும் அறிவுறுத்துவதுண்டு. உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தின் படி பெண்கள் நாள் ப்ன்றுக்கு 91 அவுன்ஸ் ஆண்கள் 125 அவுன்ஸ் நீர் எடுத்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது குடிக்கும் நீரை தாண்டி உணவு மற்றும் குடிக்கும் பானங்களிலிருக்கும் நீரும் அடங்கும்.
உடல் எடையை குறைக்க செய்யும் தினமும் எலுமிச்சை நீரை குடிப்பது உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவும். உண்ணும் உணவில் கலோரிகளை குறைத்து எடுக்கும் போது எடை இழப்பும் சாத்தியமாகிறது. எலுமிச்சை சேர்த்த நீர் பசி உணர்வை குறைப்பதால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகாது.
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது உணவு உட்கொள்ளும் கலோரி அளவை குறைப்பதாக ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வு ஒன்றின்படி உணவோடு இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதல் பசி உணர்வு குறைந்து வயிறு நிறைந்த உணர்வு உண்டாகும் என்கிறது.
தண்ணீரின் மூலமே இந்த நன்மைகளை பெறமுடியும் என்றாலும் எலுமிச்சை நீர் அதிக கலோரி பானங்களுக்கு மாற்றாக சுவையாக இருக்கும். நீரிழிப்பு உண்டாகும் போது பசி உணர்வு அதிகரிக்க செய்யும். ஆனால் எலுமிச்சை நீர் நீரிழைப்பையும் தடுப்பதா இது எடை குறைப்பில் சிறப்பாக கைகொடுக்கும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
எலுமிச்சை நீர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். விஞ்ஞான அறிக்கைகளில் 2017 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் எலுமிச்சை சாறு எடுத்துகொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உடலில் குடல் உறுப்பு சீராக இருக்கும் போது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலுக்கு நன்மை செய்கிறது. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் நெருங்காமல் தவிர்க்கலாம்.
ஆயுர்வேதம் எலுமிச்சையில் இருக்கும் புளிப்பு சுவை உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. உணவில் இருக்கும் நச்சுகள் உடலில் தேங்காமல் வெளியேற்றவும் உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் நீர் குடித்தாலே போதும் உங்கள் செரிமான அமைப்பு துண்டப்படும். கூடுதலாக மலச்சிக்கல் இல்லாமல் செயல்படும் எனவே நீங்களும் எலுமிச்சையின் பயனை பெற்றிடுங்கள் .
கருத்துக்களேதுமில்லை