197 பேர் இன்று நாடு திரும்பினர்!
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 197 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் இருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 78 பேரும், ஜப்பானின் நரீட்டா நகரில் இருந்து 12 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துக்களேதுமில்லை