கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம்…
கோவிட் -19 தடுப்பூசி விநியோக பணிக்குழுவில் ஒன்பது உறுப்பினர்களை நியமிப்பதாக ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் கனடிய பாதுகாப்புப் படைத் தலைவரான ஜெனரல் ரிக் ஹில்லியர் தலைமையிலான இப்பணிக்குழு, கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம், பராமரிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்பார்வையிடும்.
மேற்படி பணிக்குழு, தொழிற்பாடுகள் மற்றும் உபகரணங்கள், மத்திய, மானில மற்றும் பூர்வீககுடிகள் தொடர்பான உறவுகள், சுகாதாரம், நோய்த்தடுப்பு, தகவல் தொழிநுட்பம், தரவுகள் போன்றவற்றுக்கான நிபுணத்துவ நெறிமுறைகளை அரசுக்கு வழங்குவதற்கு அமைச்சகங்களுடன் இணைந்து செயற்படும்.
இப்பணிக்குழு பல முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதுடன், குறிப்பாக விநியோகம், உபகரணங்கள் தொடர்பான நிர்வாகம், மருத்துவ ரீதியிலான வழிகாட்டுதல், பொதுமக்களுக்கான அறிவூட்டுதல் மற்றும் அது தொடர்பான மேம்படுத்தல் போன்றவற்றில் உடனடியாகவே செயற்பட ஆரம்பிக்கும். இன்று காலை, ஜெனரல் ஹில்லியர் அவர்கள் முதல் 100,000 தடுப்பூசி விநியோகம் குறித்த பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினார். இப்பணிக்குழு தடுப்பூசி பெறுவதற்கான முன்னுரிமையைப் பெறும் மக்களைப் பற்றி விவாதிப்பதற்கான அதன் ஆரம்பக் கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு நடத்துகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஃபோர்ட் அவர்கள் பங்கேற்பதால், இன்று பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை அவர் நடத்த மாட்டார்.
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ – றூஜ் பார்க்
கருத்துக்களேதுமில்லை