வவுனியாவில் 3000க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டும்செயற்றிட்டம் !
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 7 குளங்களின் கீழ் 3000க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டும்செயற்றிட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக இன்றையதினம் (12) காலை வீரபுரம் கல்வீரங்குளம் குளத்தின் கீழ் 350க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
குளத்து நீர் ஆவியாகுவதை தடுத்தல் , குள சூழலை பாதுகாத்தல் , நிலக்கீழ் நீரை சேமித்தல் , குளக்கக்கட்டினை பாதுகாத்தல் என்பவற்றினை நோக்கமாக கொண்டு என்பவற்றின் அனுசரணையில் அரசாங்கத்தினால் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் , திட்ட முகாமைத்துவ பிரிவினர் , கமநல சேவை திணைக்களத்தினர் ,மாகாண விவசாய திணைக்களத்தினர் , பிரதேச செயலகத்தினர் , பாடசாலை மாணவர்கள் , காவல் துறையினர் , இரானுவப்படையினர் , பிரதேச விவசாயிகள் , இளைஞர் , யுவதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக ஒரு வாரம் இடம்பெறவுள்ள இவ் மரநடுகை திட்டமானது அடப்பங்குளம் , முதலியார்குளம் , மாங்குளம் , வீரபுரம் , துட்டுவானை , கலேசியம்பலாவெவ குளங்களின் கீழ் மரங்கள் நாட்டப்படவுள்ளன.
கருத்துக்களேதுமில்லை