தாயின் மரணச்சடங்கில் கலந்துகொள்ளச்சென்ற இரு பிள்ளைகள் மரணம்

தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கான சென்ற இரு பிள்ளைகள் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் மீரிகம – கீனதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு (14) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.
தாயாரின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மீரிகம – கீனதெனிய பிரதேசத்திற்கு சென்றிருந்த நிலையில், நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய நிலையிலேயே இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள நபரொருவரால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை இறந்த இரு சகோதரர்களும் அருந்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மதுபானத்தை அருந்திய மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.