தலவாக்கலை, ஸ்டேலின் தோட்டத்தில் 06 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தலவாக்கலை, ஸ்டேலின் தோட்டத்தில் 06 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

 

இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த வருடத்தில் இத்தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பணிப்புக்கு அமைய இவ் புதிய வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிலிப், சபை உப தலைவர், உறுப்பினர்கள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.