அளவெட்டி வைத்தியசாலை, கீரிமலை அந்திரட்டி மடத்திற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு தொற்று உறுதியான ஒருவர் சென்றுள்ளது கண்டறியப்பட்டதால் கீரிமலை அந்திரட்டி மடம் செவ்வாய்கிழமை முதல்  மறு அறிவித்தல் வரும்வரை முடக்கப்பட்டுள்ளது.
யாழ். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட நபர்  தொற்றுறுதியான ஏழாலையைச் சேர்ந்த நபர் அண்மையில் நீத்தார் கடன் நிறைவேற்றச் சென்று திரும்பியமை தெரியவந்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் கீரிமலை தர்ப்பண மடம் உள்ள பகுதியை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் குறித்த தினத்தில் கிரியை நிகழ்வை நடத்திய மானிப்பாயைச் சேர்ந்த அந்தனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் அளவெட்டி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழையில் தொற்றுக்குள்ளான நபர்கள் இருவர் குறித்த வைத்தியசாலையில் சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்றுள்ளமை தெரியவந்துள்ள நிலையிலேயே, குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட்டவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.