(வீடியோ )காரைதீவு தமிழ் பாரம்பரிய கிராமத்தினது நிலங்களைநுட்பமான முறையில் கைப்படுத்துவதற்கு தீவிர முயற்சி – முறியடிப்பு நடவடிக்கையில் தவிசாளர் ஜெயசிறில்
காரைதீவு தமிழ் பாரம்பரிய கிராமத்தின் நிலங்களை நுட்பமான முறையில் கைப்படுத்துவதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற தரப்பினர்களுக்கு சரியான பாடங்கள் தொடர்ந்து கற்பித்து கொடுக்கப்படும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு எதிரில் உள்ள வயல் காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமான முறையில் மண் கொண்டு நிரப்புவதற்கு நேற்று மதியம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தவிசாளரின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.
மர்ம நபர் ஒருவர் ரம்ரெக் – ஆளடியன் வாகனத்தில் கிரவல் மண்ணை கொண்டு வந்து கொட்டி இருக்கின்றார். இதை தடுப்பதற்கு முயன்ற கிராம சேவையாளரை தாக்க முயன்று விட்டு தப்பி சென்றார்.
கிராம சேவையாளர் மூலமாக இவ்விடயம் தவிசாளரின் மேலான கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. காரைதீவு பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தவிசாளர் வழங்கிய தகவலின் பேரில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸார், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் வந்தனர்.
பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல், வயல் காணியின் நீர் வழிந்தோடும் பாதையை மூடுகின்ற வகையில் மண் கொட்டப்பட்டு இருப்பதாக பொலிஸாருக்கு தவிசாளர் விளங்கப்படுத்தினார்.இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் பிரதேச சபைக்கு இருப்பதாக பொலிஸார் ஒப்பு கொண்டனர். இதை அடுத்து தவிசாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மண் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக தவிசாளர் ஜெயசிறில் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில் மிக நீண்ட காலமாக பல வடிவங்களிலும் எமது பாரம்பரிய நிலங்களை கைப்படுத்துகின்ற பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற தரப்பினர்களை நாம் மிக நன்றாகவே அறிவோம், அத்தரப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு இன ரீதியாக அரசாங்க அதிகாரிகளும் உதவி, ஒத்தாசை, ஆதரவு வழங்கி வருகின்றனர், தற்போதைய சம்பவத்தோடு தொடர்பு பட்டு எம்மால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் அத்தரப்பினர்களுக்கு சரியான பாடமாக அமையும், இதில் சமரசத்துக்கு இடமே இல்லை, அத்தரப்பினர்களால் கைப்படுத்தப்படுகின்ற தறுவாயிலில் பல இடங்கள் எமது மண்ணில் இருக்கின்றன, அவற்றையும் நிச்சயம் காப்பாற்றுவோம் என்றார்.
https://www.facebook.com/118525214841799/posts/4076097479084533/
கருத்துக்களேதுமில்லை