இந்தியத் தூதுவருடன் கொழும்பில் சம்பந்தன் குழு முக்கிய பேச்சு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று நேரில் சந்தித்துப்  பேச்சு நடத்தியுள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதராலயத்தில் இந்தப் பேச்சு இடம்பெற்றது.

சந்திப்பில் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதேநேரம், இந்தச் சந்திப்பில் பேசப்பட்டவற்றைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்றும் இரு தரப்பினரும் தீர்மானித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழர் விவகாரம், பொருளாதார, அரசியல் விடயங்கள் குறித்து முக்கியமாக இதன்போது பேசப்பட்டன என்றும் தெரியவந்தன.

அத்துடன் வடக்கு, கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய திட்டங்களைச்  செயற்படுத்துவது தொடர்பிலும் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதேவேளை, பலாலி விமான நிலையத்தை மீளவும் இயங்கச் செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்றும், காங்கேசன்துறை துறைமுகத்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்றும் தூதுவர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.