துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் இளைஞன் கைது…

(பதுர்தீன் சியானா)
திருகோணமலை-கந்தளாய் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப்பகுதியில்  சொட்கன் என்றழைக்கப்படும் (போல தொலக)  துப்பாக்கி மற்றும் ஐந்து  ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (19)  மாலை கைது  செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தளாய்-பேராறு பகுதியைச் சேர்ந்த 30 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.
அனுராதபுரம்- சாலியபுர இராணுவ வீரர்களின் பயிற்சி கந்தளாய் குளத்துக்கு மேலே உள்ள காட்டுப் பகுதியில் இடம்பெற்ற வேளையில் குறித்த நபரை இராணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபரை நாளைய தினம் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தியதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.