அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..!
அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 28ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை முதல் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
முதல்கட்டமாக 29 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோசை போட முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, முதலாவது டோஸ் போடப்பட்டவர்களுக்கு ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ, ஒவ்வாமை ஏற்பட்டாலோ, அவர்கள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளக்கூடாது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை