யாழில் மேலும் இருவருக்கு கொரோனா – மருதனார்மடம் கொத்தணியின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புடைய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 120 பேருக்கு இன்று (20) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகளிலேயே தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.