பண்டிகை காலத்தில் சுற்றுலா செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு புதிய அறிவிப்பு …
பண்டிகை காலத்தில் நுவரெலியாவுக்குச் சுற்றுலா செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி சுற்றுலா செல்பவர்கள் தாம் கொரோனா அவதானமிக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதற்காக அவர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் சான்றிதழ் ஒன்றை பெறுவது கட்டாயமாகுமென, நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.
மேலும் அத்துடன், சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலும் சான்றிதழை கையளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை