பிரித்தானியாவில் தலைதூக்கியுள்ள புதிய கொரோனா தொற்று பரவலை அடுத்து பல நாடுகள் விமானப் போக்குவரத்தை துண்டித்தது!
கொரோனா வைரஸ் பரவலின் புதிய அலை பற்றிய அச்சத்தை அடுத்து ஐக்கிய இராச்சியம் மூடப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு நெருக்கமான பல ஐரோப்பிய நாடுகள் போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. இதேவேளை, தாய்லாந்தில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருகின்றது. தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் உள்ள சமுத் சக்கொன் மாகாணமும், அதனை அண்டிய பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 40 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசின் புதிய ஆபத்து பற்றிய செய்திகள் வெளியாகியதை அடுத்து, அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்த சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகலாவிய ரீதியில் கொவிட் தொற்றுக் காரணமாக இதுவரை 17 இலட்சத்து ஆயிரத்து 797 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு கோடி 72 இலட்சத்து 75 ஆயிரம் பேர் வரை இந்த வைரஸ்; தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 5 கோடி 42 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளனர்.
இன்று இரண்டாயிரத்து 597 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 493 மரணங்கள் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை மூன்று இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கொவிட் உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மெக்சிக்கோவில் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை