மொபைல் பேட்டரியை அதிக நேரம் பயன்படுத்த சிறந்த வழிகள்
பழைய மொபைலாக இருந்தால் கீழே எவ்வளவுதான் தூக்கி அடித்தாலும் அதன் விசுவாசத்தை காட்டி எங்களுக்கு சந்தோஷத்தையே தரும். அதுபோல எவ்வளவு பயன்படுத்தினாலும் பேட்டரி குறையாது. ஆனால் நமது புதிய பரம்பரை கண்டுபிடித்த ஸ்மார்ட்போன்களுக்கு நாம் மாறிய பிறகு, காலை முதல் இரவுவரை கூட பேட்டரியை பாதுகாப்பாக மிச்சம் பிடித்து வைத்துக்கொள்வது மிகவும் கடினம். ஆனால் இந்த விடயங்களை செய்தால் ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தலாம்.
BRIGHTNESS ஐ குறைக்கவும்
எந்தவொரு மொபைலாக இருந்தாலும் அந்த மொபைலின் பேட்டரியை சரமாரியாக குறைத்து, சீக்கிரம் மின் இணைப்பை தேடி ஓட வைக்கும் ஒரு பாகம் என்றால் டிஸ்பிலே என்று சொல்லலாம். அதேபோல டிஸ்பிளேயின் பிரகாசம் அதிகரிக்கும் போது தொலைபேசியின் பெரும்பாலான பேட்டரி ஆயுள் குறைகிறது. நீங்கள் அடிக்கடி வெயிலில் நடந்தால், சூரிய வெளிச்சத்தில் மொபைல் திரையை சரியாக பார்க்க முடியாது. அதனால் மொபைல் திரையின் பிரகாசத்தை அதிகரிப்பீர்கள். பிரகாசம் இந்த நிலையில் இருக்கும்போது, பேட்டரி மிக விரைவாக குறைந்து விடும். எனவே, நீங்கள் வெளிச்சத்தில் தொலைபேசியின் பயன்பாட்டைக் குறைத்து குறைந்தளவு பிரகாசத்துடன் பாவித்தால் நீண்ட நேரம் பேட்டரியை தக்க வைக்க முடியும். தொலைபேசியில் AUTO BRIGHTNESS என்கிற OPTION இருந்தால் அதை OFF செய்து விட்டு திரையின் பிரகாசத்தை கையால் அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இப்படி செய்தால் இன்னும் கொஞ்சம் பேட்டரியைச் சேமிக்கலாம். 50% க்கும் அதிகமாக பிரகாசத்தை அதிகரிக்காமல் பாவிக்க முடிந்தால் மிகவும் நல்லது.
ஜி.பி.எஸ் (GPS) ஐ OFF செய்யவும்
நீங்கள் அடிக்கடி GOOGLE MAP ஐ பயன்படுத்தாவிட்டால் பூமியில் எங்கள் இருப்பிடத்தைக் காட்டும் சேவை உங்களுக்குத் தேவையில்லை. புதிய தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுக்கும்போது, புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தை சேமிக்கவும் இந்த GPS உதவுகிறது. உங்களுக்கு அந்த OPTION தேவையில்லை என்றால், முடிந்தவரை GPS ஐ OFF செய்து வைக்க முயற்சிக்கவும். இதனால் பேட்டரியை சேமிக்கலாம்.
4G க்கு பதிலாக 3G ஐ பயன்படுத்தவும்
உங்கள் மொபைலில் 4G இருந்தால், GB அளவுக்கு பெரிய தரவுகளை நீங்கள் டவுன்லோட் செய்யவில்லை என்றால், அதை off செய்து விட்டு நிறைய நேரம் பேட்டரியை சேமிக்கலாம். 4G வந்தவுடன் கூகிளில் சேர்ச் செய்வதும் பேஸ்புக்கில் ஜோக் வீடியோஸ் பார்ப்பதும் வேகமானது, ஆனால் இந்த வேலையை 3G கூட சிறப்பாக செய்ய முடியும். ஏனென்றால் இப்போதெல்லாம் பெரும்பாலான இடங்களில் 4G யை விட 3G அதிகமாக உள்ளது.
கேமிங் மற்றும் வீடியோ பார்ப்பதைக் குறைக்கவும்
மொபைலில் மிகவும் பயன்படுத்தப்படும் கேம்களை விளையாடுவது மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது போன்றவற்றினால் பேட்டரி இலகுவாக செயலிழக்கக்கூடும். இவை இரண்டும் காரணமாக, மொபைல் டிஸ்பிளே இயங்கும் நேரம், மொபைல் டேட்டா மற்றும் கிராபிக்ஸ் போன்ற காரணிகளால் மொபைல் பேட்டரி சட்டென்று குறையலாம். எனவே, சார்ஜ் செய்ய அருகில் இடம் இல்லாதபோது பொறுமையாக இருப்பது நல்லது. அதற்கு நீங்கள் சோம்பேறியாக இருந்தால், டிஸ்பிலேயை OFF செய்துவிட்டு HEADSET ஐ காதில் மாட்டிக்கொண்டு ஒரு பாடலைக் கேளுங்கள்.
POWER SAVING MODE ஐ ON செய்யலாம்
முன்பெல்லாம் உங்கள் தொலைபேசியின் பேட்டரியைச் சேமிக்க எதுவும் இருக்கவில்லை, ஆனால் இப்போது பெரும்பாலான புதிய தொலைபேசிகளில் தொலைபேசியுடன் வரும் பேட்டரி சேவர் உள்ளது. இவை பேட்டரியை அடிக்கடி பயன்படுத்தும் பயன்பாடுகளை எங்களுக்குக் காண்பிக்கும். மேலும் பின்னணியில் நாங்கள் அடிக்கடி பயன்படுத்தாதவற்றை நிறுத்துகின்றன. இதன் மற்றொரு அம்சம் POWER SAVING MODE தான். சில தொலைபேசிகளின் ULTRA POWER SAVING MODE என்றும் உள்ளது. அதனை போட்டவுடன் பழைய மொபைல்களை போல குறிப்பிட்ட சேவைகளை மாத்திரமே பாவிக்க முடியும். மொபைலில் 50% ஆக இருக்கும்போது, சார்ஜ் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரிந்தால், இதனை போட்டு பாவிப்பது நல்லது.
கருத்துக்களேதுமில்லை