யாழ்-மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளுக்கு மடிக்கணனிகள் வழங்கி வைப்பு
யாழ்.மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளுக்கு, திறன் வகுப்பறைத் தொகுதிக்கான மடிக்கணனிகள் இன்றையதினம் (23)வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மடிக்கணனிகளை வழங்கி வைத்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில்,ஏற்கனவே சுமார் 268 பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைத் தொகுதிக்கான மடிக்கணனிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தீவகம் கல்வி வலயத்தில் சுமார் 80 விகிதமான பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், தீபக வலய பிரதி கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை