வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தொழிற்சாலைக்கு பூட்டு
வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23.12.2020) மாலை வெளியாகிய பி.சி.ஆர் அறிக்கையில் நான்கு ஆண்கள் ஆறு பெண்களுமாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகிய போது மேற்படி பத்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏற்கனவே பி.சி.ஆர் பரிசோதனை செய்த 60 பேரின் குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும் என பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை