காங்கேசன்துறைக்கு கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விஜயம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நேற்று (23) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை – காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு ஆய்வு செய்யப்பட்டது.
இவ்விஜயத்தின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் அடிப்படை வேலைகளை முடித்து கொண்டு விரைவில் துறைமுகம் திறக்கப்படும் என்றார்.
இவ் அபிவிருத்தி திட்டமானது 45.27 மில்லியன் (அமெரிக்க டொலர்) ரூபாய் செலவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை