வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்பு
வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் கடந்தபுதன்கிழமை(23) மதியம் பொதுமக்கள் வழங்கி தகவல் ஒன்றிற்கமைய காணி ஒன்றில் இருந்து இக்குண்டு மீட்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன் குண்டினை மீட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஜி.ரி.ஜி எம்.எம் 40 குண்டினை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய செயலிழப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குண்டு மீட்கப்பட்ட பகுதியானது கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பாறுக் ஷிஹான்)
கருத்துக்களேதுமில்லை