யாழில் “பிரஜா ஹரித்த அபிமானி“ மரநடுகை நிகழ்வு

நீர்வழங்கல் அமைச்சினால் ஆலோசிக்கப்பட்ட “பிரஜா ஹரித்த அபிமானி” 2020 திட்டத்திற்கு அமைவாக மரநடுகை நிகழ்வானது தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் இன்றை தினம் (24) யாழ்ப்பாண மாதகல் நீர்ப்பாவனையாளர் சங்க வளாகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் மரக்கன்றுகள் நாட்டிவைத்தலுடன் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், அப்பகுதி பிரதேச செயலாளர்கள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணிப்பாளர், சமூக அபிவிருத்தி சங்கங்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.”

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.