65ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த 644ஆவது கோல் இதுவாகும். இதன் மூலம் ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்.
பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் 1956ஆம் ஆண்டு முதல் 1974ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார். அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பார்சிலோனா கிளப்புக்காக கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் 33 வயதான மெஸ்சி கூறுகையில்,, ‘நான் கால்பந்து விளையாடத் தொடங்கிய போது எந்த ஒரு சாதனையையும் தகர்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் பிலேவின் சாதனையை கடப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகள் எனக்கு பக்கபலமாக இருந்த அணியின் சக வீரர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
கருத்துக்களேதுமில்லை