மலையகத்தில் கிறிஸ்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்

நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார்.  அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.

எப்பொழுதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது இந்தமுறை கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் மட்டும் ஒன்று கூடி கொண்டாடினர். அந்தவகையில் மலையகத்தில் (25) இன்று கிறிஸ்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் அட்டன் நகரில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் 25.12.2020 அன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸ் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சில பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.