கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள்!

கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் குறித்த கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் குறித்த கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, நேற்றையதினம் குறித்த கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவற்றில் விவசாய கழிவுகள் இருந்தமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த கொள்கலன்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மீளவும் உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.