மன்னாரில் ஆழி பேரலையில் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!
ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வான தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை நினைவு கூறப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 9.25 முதல் 9.25 வரையான நேர பகுதியில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை