அம்பாறை மாவட்ட ஊடக அமையத்திற்கு மட்டு ஊடகவியலாளர் ஒன்றியம் வாழ்த்து!
அம்பாறை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஊடக அமையத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
தனது வாழ்த்து செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
கிழக்கின் ஊடக வரலாற்றில் அம்பாறை மாவட்டம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
பல் சமூகங்களின் இருப்பிடமாக உள்ள அம்பாறை மாவட்ட ஊடக அமையம் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று அம்பாறை மாவட்டத்தின் குரலாக செயற்பட வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
என அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை