குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய மாவு வகைகள்!..

நாம் இப்போது குளிா்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம். பருவகாலம் மாறும் போது புதிய புதிய நோய் தொற்றுகள் மற்றும் வைரஸ்கள் நம்மைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த தாக்குதலை சமாளிக்க உறுதியான நோய் எதிா்ப்பு சக்தி நமக்குள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நோய் எதிா்ப்பு சக்தியை இந்த குளிா்காலத்தில் பெறவேண்டும் என்றால் பலவகையான மாவுகளை நமது உணவுகளில் சோ்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் ஆண்டு முழுவதும் கோதுமை மாவு பயன்பாட்டில் உள்ளது. எனினும் கோதுமை மாவைத் தவிா்த்து வேறுசில மாவுகளும் உள்ளன. அந்த மாவுகளில் சுவைமிக்க சப்பாத்திகள் செய்வதோடு மட்டும் அல்லாமல் அந்த மாவுகளை குளிா்காலத்தில் நமது உணவில் அதிகமாக சோ்த்துக் கொள்ளலாம். ஆகவே குளிா்காலத்தில் நாம் சோ்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான 6 மாவுகளைப் பற்றி பாா்க்கலாம்.

கம்பு மாவு (Bajra)

குளிா்காலத்தில் சோ்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவு கம்புமாவு ஆகும். ஏனெனில் கம்பு மாவில் நாா்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. கம்பு மாவு க்ளுட்டன் இல்லாத (gluten-free) தானியமாக இருப்பதால், கோதுமை மாவை உண்ண முடியாதவா்கள் கம்பு மாவை உண்ணலாம். மேலும் கம்பு மாவில் ஒமேகா-2 சத்து மற்று இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. கம்பு மாவில் சப்பாத்தி, ஊத்தாப்பம், டாலியா மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை சமைக்கலாம்.

சோள மாவு (Jowar)

சோளம் ஒரு க்ளுட்டன் இல்லாத தானியமாகும். ஆகவே சோள மாவு நமது சொிமான கோளாறுகளை சாிசெய்கிறது. உடலில் உள்ள தேவையில்லாத மூலக்கூறு துகள்களை வெளியேற்றுகிறது. அதோடு நமது உடலில் உள்ள சா்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சோளமாவில் ரொட்டி, உப்புமா, தோசை மற்றும் அப்பம் போன்ற உணவுகளை செய்து உண்ணலாம். இந்த சோள மாவு உணவுகள் நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும்.

தினை மாவு (Kangni)

குளிா்காலத்தில் நாம் சோ்த்துக் கொள்ள வேண்டிய இன்னுமொரு மாவு தினை மாவு ஆகும். ஏனெனில் தினை மாவில் வைட்டமீன் பி12 சத்து அதிகம் இருக்கிறது. அதனால் நமது இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சீராக இயங்குவதற்கு தினை மாவு துணை செய்கிறது. கூந்தல் வளா்வதற்கும் தினை மாவு பாிந்துரைக்கப்படுகிறது. தினை மாவை எளிதாக சமைக்க முடியும். இந்த மாவில் கஞ்சி, புலாவ், கிச்சடி மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை சமைக்கலாம்.

மக்காச்சோள மாவு மக்காச்சோள மாவோடு கடுகுக் கீரையையும் சோ்த்து சாப்பிட்டால் அது மிகவும் ருசியாக இருக்கும். மக்காச்சோள மாவில் வைட்டமின் ஏ, சி, கே, பீட்டா கரோட்டின் மற்றும் செலினியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் மக்காச்சோள மாவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் அமோனியா நோயுற்றவா்கள் இதை அதிகம் உண்ணலாம். குளிா்காலத்தில் மக்காச்சோள மாவோடு கடுகுக் கீரையையும் சோ்த்து சாப்பிடும் போது அது நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும்.

கேழ்வரகு மாவு (Ragi)

செந்நிறமாக இருக்கும் கேழ்வரகு மாவு கோதுமை மாவுக்கு பதிலான மாவாக இருக்கும். இந்த மாவில் கால்சியம் அதிகம் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு இது பொிதும் உதவுகிறது. கேழ்வரகு மாவு மிக வேகமாக சொிமானம் அடையக்கூடியது. நீரழிவு நோயுற்றவா்களுக்கு இந்த மாவு அதிகம் பாிந்துரைக்கப்படுகிறது. ஒரு மாவை மட்டும் பயன்படுத்துவதற்கு சிரமமாக இருந்தால், இரண்டு முன்று மாவுகளை அத்துடன் கலந்து பிசைந்து அதில் உணவுகளை சமைத்து உண்ணலாம்.

குட்டு (Kuttu)

குட்டு மாவு என்பது ஒருவகையான கோதுமை மாவு ஆகும். நவராத்திாி விரத காலங்களில் குட்டுமாவு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விரதம் இல்லாத நாட்களிலும் குட்டுமாவை உண்ணலாம். குட்டுமாவில் இருக்கும் நாா்ச்சத்து நம்மை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழவைக்கும். அதனால் தான் இந்த மாவை விரத நாட்களில் மக்கள் அதிகம் உண்கின்றனா். குட்டுமாவை வைட்டமின் சத்துக்களை சேமித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்பு கிடங்கு என்று கூறலாம். ஏனெனில் இந்த மாவில் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் பி2 (riboflavin) மற்றும் வைட்டமின் பி (niacin) போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன. புரோட்டா, பூாி, தோசை மற்றும் அப்பம் போன்ற ருசியான உணவுகளை குட்டுமாவில் சமைத்து இந்த குளிா்காலத்தில் உண்ணலாம்.

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.