மட்டக்குளிலிருந்து ஹப்புத்தளை சென்ற மூவருக்கு கொரோனா!
கொழும்பு மட்டக்குளிய பகுதியில் இருந்து மரண சடங்கில் பங்கேற்பதற்காக ஹப்புத்தளை சென்றிருந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹப்புத்தளையில் கஹகொல்ல, பங்கட்டி, தங்கமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் தொழில் நிமித்தம் கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மரண சடங்கில் பங்கேற்பதற்காக ஹப்புத்தளை சென்றுள்ளனர். கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூவருக்கும் இன்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை