பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் -கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு !
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது சார்ந்த விடயங்களுக்கு சுகாதார பிரிவால் பச்சை சமிக்ஞை காட்டப்பட்டால் மாத்திரமே, அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், குறித்த பாடசாலைகளில் எவ்விதமான விளையாட்டுப் போட்டிகளுக்கும் இல்லப் போட்டிகளுக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து, சுகாதாரப் பிரிவினருடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை