வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தும் மாடுகள்: நகரசபையினரினால் 170 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!..

 

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்து நிலையில் 170 கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டன.

புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலின் போது கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வவுனியா நகரசபையினால் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நகரசபை உறுப்பினர்களின் மாடுகள் உட்பட 170 மாடுகள் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவில்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 170 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒரு நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

இNதுவேளை, சமீப காலமாக வவுனியாவில் இக் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.