மாகாணசபை தேர்தலை நடத்தாமல் பிற்போட்ட பெருமை கடந்த அரசாங்கத்தினையே சாரும் – வியாழேந்திரன் சாடல்

மாகாண சபை தேர்தலை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக  இழுத்தடிப்பு செய்து தொடர்ச்சியாக பிற்போட்டுவந்த பெருமை தற்போது இருக்கின்ற எதிர்க்கட்சியைத்தான் சாருமென பசுமை மீட்புப் பாசறை எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (01) வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற போது நிகழ்வில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்….
2020 ஆம் ஆண்டு கொவிட் 19 போன்ற சோதனைகளை சந்தித்து இருந்தாலும் அந்த சவால்களுக்கு மத்தியிலும் நாட்டை கட்டியெழுப்புகின்ற வேலைத் திட்டத்தை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. அந்த அடிப்படையில்  மலர்ந்திருக்கும் இப் புத்தாண்டில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான ஆண்டாகவும் சாதனையின் ஆண்டாகவும் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்ற ஆண்டாகவும் ஏழை மக்களின் வாழ்வில் ஒரு விடிவு பிறக்கும் ஆண்டாக அமைய வேண்டுமென ஆத்மார்த்தமான எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு எமது முற்போக்கு தமிழர் அமைப்பு பசுமை மீட்பு பாசறை என்ற தொனிப்பொருளில் ஒரு சிறப்பான செயல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள். நாட்டினுடைய மேன்மை தங்கிய ஜனாதிபதியினுடைய எண்ணக்கரு நாட்டை சுபீட்சத்தின் பால் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணக்கரு அந்த எண்ணக் கருவிற்கு ஏற்பவும் நாட்டிலே மரங்களை நேசிப்போம் இயற்கையை சுவாசிப்போம்.
முற்போக்கு தமிழ் பிள்ளைகள் பசுமை மீட்பு பாசறை என்ற தொனிப்பொருளில் அவர்கள் ஒரு மிகப்பெரிய செயற்திட்டத்தை எனது தலைமையின் கீழ் ஆரம்பித்திருக்கின்றார்கள் அந்த அடிப்படையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை கட்டம் கட்டமாக நடுகின்ற  திட்டத்தை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்து இருக்கின்றோம்.
ஆகவே  கட்டம் கட்டமாக 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அந்த செயற்றிட்டத்திற்கு வடிவும் கொடுத்து எமது சூழலை பாதுகாப்பது எமது நோக்கமாகும். அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நாங்கள் நில வளத்தை பாதுகாக்க என்ற எண்ணக்கருவில் மிகவும் உறுதியாக உள்ளவர்கள் என்பதனடிப்படையில் ஒரு அம்சமாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினுடைய நோக்கமும் மக்களுக்கு பயன்தரக்கூடிய மரங்களை நடவேண்டும் அந்த அடிப்படையில் இன்று நாங்கள் ஆரம்பித்து இருக்கின்ற செயற்திட்டத்தில் மக்களுக்கு பயன் தரக்கூடிய மரங்களை இனங்கண்டு அவற்றை நாட்டுவதுதான் எமது அடிப்படை நோக்கம் என தெரிவித்தார்.
தற்போது இருக்கின்ற அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை பிற்போடவோ அல்லது இழுத்தடிக்கவோ இல்லை தற்போது நாட்டில் நிலவும் கொரோனா காரணமாக இத்தேர்தல் தொடர்பாக சிந்திக்கின்றது என தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.