தமிழக கிரிக்கெட் வீரரின் தாயார் மரணம் – ரசிகர்கள் அஞ்சலி!
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான முருகன் அஸ்வினின் தாயார் ரத்த புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி அதன் மூலம் இந்திய அணியிலும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தமிழ் எழுத்தாளர் இரா முருகனின் மகனும் ஆவார்.
இந்நிலையில் முருகன் அஸ்வினின் தாயார் கிரிஜா ரத்தப்புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக எழுத்தாளர் முருகனின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘என் வாழ்க்கைத் துணைவி திருமதி கிரிஜா முருகன், ரத்தப் புற்றுநோயால் (Acute Myeloid Leukemia) பாதிக்கப்பட்டு டிசம்பர் 30, புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். டிசம்பர் 31 வியாழனன்று இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை