இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கை வருகை !
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
விசேட விமானமொன்றின் ஊடாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இங்கிலாந்து வீரர்கள் வந்தடைந்துள்ளனர்.
இங்கிலாந்து அணி, இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியுடன் விளையாடவுள்ளது.
முதலாவது போட்டி எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த இரண்டு போட்டிகளையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை